search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக காவல்துறை"

    காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் காவலர்கள் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் இருப்பதால் அவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பலர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றியிருக்கிறது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கான அரசாணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின்

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 13-9-2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான காவலர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்  அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணை இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும் உற்சாகத்தோடு தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும். 

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை காவல்துறை உருவாக்கியுள்ளது. #CrimesAgainstWomen #TNPolice
    சென்னை:

    பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சமூக வலைத்தள பயன்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும்.


    புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளனர். சிபிஐ, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தொகுப்பையும் இந்த அமைப்பு உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CrimesAgainstWomen #TNPolice

    தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு

    * வரும் நிதி ஆண்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு

    * தோட்டக்கலைத்துறை மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * தோட்டக்கலை மற்றும் வேளாண் கல்லூரிகளில் மேம்பாட்டிற்கு ரூ.79.73 கோடி ஒதுக்கீடு

    * தனிநபர்களின் ஆண்டு வருமானம் தமிழகத்தில் ரூ.1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது



    * மேலும் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும்- இதற்காக ரூ.1361 கோடி ஒதுக்கீடு

    * வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்

    * சூரிய சக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் மூலம் நீர்மேலாண்மை மேம்படும்

    * வரும் நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

    * 2018-19-ம் ஆண்டில் உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 8.16 சதவீதமாக உயர்வு

    * வரும் நிதியாண்டில் 1,986 கிமீ நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது தொடர்பான வழக்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக போலீசார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #CBI
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இறுதிக்கட்டமாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு வழக்கில் யாருடைய உத்தரவு பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.


    இந்நிலையில் சிபிஐ தமிழக போலீசார் மற்றும் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #CBI
    காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. காவேரிப்பட்டணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பரமணியன் காவல் துறையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "காவலன் ஆப்ஸ்" செயலி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார்.

    விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழக காவல்துறையில் "காவலன் ஆப்ஸ்"எனும் செயலி தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆபத்து வரும் போது அதை தொட்டால் 20 நிமிடத்தில் சென்னை காவல் துறைக்கு தகவல் செல்லும்.  பின்பு எந்த பகுதியில் இருந்து சமிக்கை வந்துள்ளது என்பதை ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்டறிந்து, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிப்பார்கள்.  உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு அளிப்பார்கள். காலத்துக்கு ஏற்ப பெண்கள் இதை பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இச்செயலி செயல்பட செல்போனில் முக்கிய இன்டர்நெட் கனெக்க்ஷன் தேவை. மேலும் கிராமங்களில் ஏதேனும் புதிய நபர்கள் வந்தாலோ, சந்தேகப்படும் நபர்கள் சுற்றித்திரிந்தாலோ இதுகுறித்து பொதுமக்களே  விசாரித்து, அவர்கள் கூறும் பதில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தினால் உடனடியாக அருகிலுள்ளகாவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது பையூரில் பேருந்துகள் சரியாக நின்று செல்வதில்லை.  இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பையூர் பொதுமக்கள் காவல்துறையினரிடம் முறையிட்டனர். இக்கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், காயத்ரி, ஜெயபால் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கருணாஸ் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்று சீமான் நிருபர்களிடம் அளித்து பேட்டியில் கூறியுள்ளார். #Seeman #Karunas

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் நடைபெற்றது.

    அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பனை விதைகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் அடையாளமான பனை மரத்தை இன்று 50, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. பனை மரத்தின் அருமை தெரியாமல் இளைய தலைமுறையினர் உள்ளனர். ஒரு கிணற்றை சுற்றி பனைமரங்கள் இருந்தால் தண்ணீர் வற்றாது என்று நம்மாழ்வார் கூறி இருக்கிறார்.


    இதனை உணர்த்தும் வகையிலேயே பசுமை திட்டமான இதனை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து 5 ஆயிரம் பனை விதைகளையும் வாங்கி வந்துள்ளோம். இதனையும் நட்டுள்ளோம். புளி, வேம்பு, பூவரசு, புங்கை மரக் கன்றுகளையும் நட்டுள்ளோம்.

    கருணாஸ் சாதி உணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்றால், எச்.ராஜா மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லையா? போலீஸ் அதிகாரியை தரக்குறைவாக பேசியதாக கருணாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எச். ராஜாவும் அப்படித்தான் பேசினார். கருணாசை கைது செய்தது போல எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் தேசிய செயலாளர் என்பதால் தமிழக அரசு கைவைக்க தயங்குகிறது.

    இவ்வாறு சீமான் கூறினார். #Seeman #Karunas

    தமிழக காவல்துறையில் ஆர்டலி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #OrderlySystem
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது கூறியதாவது:-

    உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற அரசு தான் நல் அரசு. அமைதியான ஆட்சியை வழங்கும் அரசுதான் நல்லரசு என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார்.

    தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “தமிழ்நாட்டில் பல்வேறு குற்றங்கள் அதிகரித்து விட்டதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள்.

    ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக கூறப்பட்ட தமிழக போலீசார் இப்போது மன அழுத்தத்துடன் இருப்பதால்தான் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 200 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    போலீசார் மன அழுத்தத்துடன் இருக்க முக்கிய காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது போல உயர் அதிகாரிகளிடம் பணிபுரியும் போலீசார் கொத்தடிமை போல நடத்தப்படுகிறார்கள்.

    பெரிய அதிகாரிகளிடம் போலீசார் வீட்டு வேலை செய்யும் ‘ஆர்டர்லி’ முறை இன்னும் தொடர்கிறது.

    இதுபோன்ற முறை இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த தி.மு.க. ஆட்சியிலும் இருந்தது. இதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

    இதற்கு பதிலாக அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #OrderlySystem
    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை எனில் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடான ஒன்று என ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நாளை விசாரணையை தொடங்க உள்ளார்.

    நேற்று வழக்கு விசாரணை ஒன்றில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், “முதலமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” எனவும் அவர் உத்தரவிட்டார். 

    இந்நிலையில், இன்றும் வழக்கு விசாரணை ஒன்றில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். 
    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை எனில் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடான ஒன்று என அவர் கூறினார்.

    மேலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினரை தவறாக பயன்படுத்துகிறார்கள். காவலர்களை காவல் பணிக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். காவல் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் தனியாக தேர்வு செய்து கொள்ள அவர் அறிவுறுத்தினார்.
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நாளை விசாரணையை தொடங்க உள்ளார்.

    இந்நிலையில், வழக்கு விசாரணை ஒன்றில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், “முதலமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” எனவும் அவர் உத்தரவிட்டார். 
    ×